ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 5 ஆண்டு பிறகு கைது

குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவர் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-03 18:45 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உலைப்பெட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன்(வயது 30). இவர் மீது மங்களூரு புறநகர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து முகமது அசாருதீன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீன் கேட்டு மங்களூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவானார்.

இந்த நிலையில் கோர்ட்டில் இருந்து விசாரணைக்காக முகமது அசாருதீனுக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. இந்த நோட்டீசிற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து கோர்ட்டு அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி முகமது அசாருதீன் மும்பைக்கு விமானத்தில் வந்தார். அப்போது சந்தேகம் அடைந்த விமான நிலையை அதிகாரிகள் முகமது அசாருதீனை கைது செய்தனர். இது குறித்து மங்களூரு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மும்பை சென்று முகமது அசாருதீனை கைது செய்தனர். பின்னர் மங்களூரு அழைத்து வரப்பட்ட அவரை, போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்