மடாதிபதி முருகா சரணரு மயக்க சாக்லெட் கொடுத்து பலாத்காரம் செய்தார்-குற்றப்பத்திரிக்கையில் தகவல்

மடாதிபதி முருகா சரணரு மயக்க சாக்லெட் கொடுத்து பலாத்காரம் செய்தார் என்று குற்றப்பத்திரிகையில் முன்னாள் மாணவி ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-10 17:21 GMT

சித்ரதுர்கா:-

மடாதிபதி முருகா சரணரு

சித்ரதுர்காவில் முருக மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் மீது மாணவிகள் கொடுத்த பலாத்காரம் புகாரின் பேரில் சித்ரதுர்கா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மடாதிபதி மீது 694 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு ஆப்பிளில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 10 மாணவிகளை சீரழித்ததாக உள்பட பல்வேறு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

8 முதல் 10-ம் வகுப்பு மாணவிகளை...

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் மடாதிபதி மற்றும் மடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகி கொண்டு வருகிறது. அதன்படி மடாதிபதி மாணவிகளை அழைத்து வருவதற்கு கோர்டு வேர்டு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தனது அறைக்கு மாணவிகளை பின்புறமாக வரவழைத்துள்ளார்.

மடத்தின் விடுதி வார்டன் ரஸ்மி உள்பட ஊழியர்கள் மாணவிகளை அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து மாணவிகள் அறைக்குள் வந்ததும் அவர்களை, ஆடைகளை கலையும்படி செய்துள்ளார். பின்னர் மாணவிகள் முன்பே மது அருந்திவிட்டு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை குறிவைத்து மடாதிபதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மடாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாணவி

இந்த நிலையில் குற்றப்பத்திரிகையில் முருக மடத்தில் படித்து வெளியேறிய பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியுள்ள பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அந்த மாணவி கூறியதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு மடத்தின் பள்ளியில் சேர்ந்தேன். அப்போது விடுதி வார்டனாக ரஸ்மி இருந்தார். ஒரு நாள் இரவு வார்டன் ரஸ்மி, மடாதிபதி அழைப்பதாக என்னிடம் கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதனால் எதற்காக மடாதிபதி அழைக்கிறார் என்று கேட்டபோது அங்கு வேலை இருக்கிறது, மேலும் மடாதிபதி அறைக்கு சென்றால் பழம், சாக்லெட் தருவார் என்று ரஸ்மி கூறினார்.

இதைக்கேட்டு தயங்கியதும், சக மாணவிகள் செல்லும்படி கூறினர். பின்னர் ரஸ்மி, என்னை மடாபதியின் அறைக்கு பின்புறமாக உள்ள வாசல் வழியாக அனுப்பி வைத்தார்.

மயக்க சாக்லெட்

அங்கு மடாதிபதி மட்டும் தான் இருந்தார். நான், உள்ளே சென்றதும் அவர் மயக்க சாக்லெட் மற்றும் ஆப்பிள் பழம் கொடுத்தார். அதை வாங்கி நான் சாப்பிட்டதும், என்னுடைய ஆடைகளை கழற்றும்படி கூறினார்.

நான் ஆடைகளை கழற்றியதும், என்னை அவரது மடியில் அமர வைத்தார். அப்போது என்னுடைய உடலின் பல்வேறு இடங்களில் அவர் கை வைத்து சில்மிஷம் செய்தார். நான் பயந்துபோனேன். இருப்பினும் என்னை அவர் மிரட்டி, அடிபணிய வைத்தார். பின்னர் படுக்கைக்கு அழைத்து சென்று கணவன், மனைவி போல் என்னுடன் நடந்து கொண்டார்.

அலாரம் வைத்து எழுப்பினார்

பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு அலாரம் வைத்திருந்தார். அந்த அலாரம் ஒலித்ததும், என்னை எழுப்பி விடுதிக்கு செல்லும்படி கூறினார். நான் பின்வாசல் வழியாக விடுதிக்கு ெசன்றேன்.இது என்னுடன் படித்த சக மாணவிகளுக்கு தெரியவந்தது. இதை அறிந்த வார்டன் மற்றும் விடுதி ஊழியர்கள் என்னை வேறு மடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முன்பு பாதிக்கப்பட்ட மாணவிகளும் போலீசில் இதே தகவலை கூறியுள்ளனர். இதனால் மேலும் பல மாணவிகள் மடாதிபதியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். இதுதொடர் பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்