'இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகாது' - அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகாது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.;

Update: 2023-09-29 16:36 GMT

புதுடெல்லி,

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்டார். இதனால் அந்த மாநிலத்தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போர் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மாசுக்கட்டுப்பாடு தொடர்பான குளிர்கால செயல்திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் 'இந்தியா' கூட்டணி தர்மத்தை நிலைநாட்ட உறுதி பூண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், 'இந்தியா' கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகாது என்று உறுதியளித்தார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்