இந்து தெய்வங்களை அவமதித்த ஆம் ஆத்மி மந்திரியை சிறைக்கு அனுப்ப வேண்டும் - பாஜக. மந்திரி ஜிது வகானி

டெல்லி ஆம் ஆத்மி மந்திரி ராஜேந்திர பால் கெளதம் இந்து கடவுள்களை ஒருபோதும் வணங்க மாட்டேன் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-07 16:29 GMT

அகமதாபாத்,

டெல்லி ஆம் ஆத்மி அரசில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் ராஜேந்திர பால் கௌதம். இவர் நேற்று முன்தினம் டெல்லியில் பௌத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் பௌத்த சமயத்திற்கு மாறினார்.

அப்போது இந்து மதக்கடவுள்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, எனவே அவர்களை வணங்க மாட்டேன் என ஆம் ஆத்மி மந்திரி கௌதம் உறுதிமொழி எடுத்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி மந்திரி ராஜேந்திர பால் கௌதம், இந்து தெய்வங்களை அவமதித்துள்ளார் என குஜராத் கல்வி மந்திரி ஜிது வகானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "குஜராத் மக்களின் பக்தி மையங்களான இந்து தெய்வங்களை ஆம் ஆத்மி மந்திரி கௌதம் அவமதித்துள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும்.

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் குஜராத் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள். குஜராத் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை நிறுத்துங்கள். குஜராத் பக்தி பூமியாகும். இது வாக்கு வங்கி அரசியலுக்கான சதி, இந்துக்களின் சகிப்புத்தன்மையைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சி என்றும் பாஜக கருதுகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்