போதைப்பொருள் விற்ற வாலிபர் சிக்கினார்

மங்களூரு அருகே போதைப்பொருள் விற்றதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-07-29 18:45 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கோனஜேவில் போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் கோனஜே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள் இருந்தது. இதையடுத்து கார் டிரைவரை கைது ெசய்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவரது பெயர் ஆரிப் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1¼ லட்சம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரை, ரூ.6½ மதிப்பிலான காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் வெளி மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தி வந்து கோனஜே பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோனஜே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்