17 வயது சிறுமியை 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
சூடான இரும்பு கம்பியால் சிறுமியின் முகத்தில் தனது பெயரை எழுதி வாலிபர் சித்ரவதை செய்துள்ளார்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றில் அமன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட அவர், சலூன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிறுமியிடம் வாலிபர் தெரிவித்தபோது சிறுமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சிறுமியை கடத்திச்சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன், சூடான இரும்பு கம்பி ஒன்றை எடுத்து சிறுமியின் முகத்தில் தனது பெயரை எழுதி சித்ரவதை செய்துள்ளார்.
பின்னர், வாலிபரின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அமனை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.