தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை; கணவர்-மாமனார் கைது
வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.இதுதொடர்பாக கணவர்-மாமனார் கைது செய்யப்பட்டனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா உலுவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பவானி (வயது 21). பவானிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரது மகன் அஜய்க்கும் (26) கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.
கடந்த சில நாட்களாக அஜய் மற்றும் அவரது தந்தை தினேஷ், தாய் சாரதா ஆகியோர் சேர்ந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு ேகட்டு பவானியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் பவானியை, மூன்று பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதனால் பவானி மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவானி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிருங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிருங்கேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் பவானியின் இறப்பிற்கு, அஜய் மற்றும் அவரது பெற்றோர் தான் காரணம் என கூறி ஆஸ்பத்திரி முன்பு பவானியின் பெற்றோர் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து போலீசார், பவானியின் கணவர் அஜய் மற்றும் அவரது தந்தை தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.. தலைமறைவாக உள்ள சாரதாவை வலைவீசி தேடிவருகின்றனர்.