ஓடும் ரெயிலில் தவறி விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் போலீஸ்..!

பெண் பயணியின் உயிரை காப்பாற்றிய பெண் போலீசுக்கு பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.;

Update: 2023-06-01 10:20 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், பேகம்பேட்டையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாக சுனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு லிங்கம் பள்ளியில் இருந்து பலக்கணுமா செல்லும் எம்.எம்.டி. எஸ் ரெயில் பேகம் பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் ஏறிய பின்னர் சிறிது நேரம் கழித்து ரெயில் மீண்டும் மெதுவாக கிளம்பியது.

தாமதமாக வந்த சரஸ்வதி என்ற பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது சரஸ்வதியின் கால் தவறி ரெயிலுக்கும் பிளாட் பாரத்திற்கும் இடையே சிக்கியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சுனிதா இதனைக் கண்டு திடுக்கிட்டார்.

இதையடுத்து ஓடி சென்று துரிதமாக செயல்பட்டு சரஸ்வதியை பிடித்து இழுத்து காப்பாற்றினார். இதனை கண்ட பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதனால் சரஸ்வதி காலில் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினார். சரஸ்வதியின் உயிரை காப்பாற்றிய பெண் போலீசுக்கு பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்