ஆபாச வீடியோ எடுத்து கணவர் மிரட்டியதால் 9-வது மாடியில் இருந்து குதித்து ெபண் தற்கொலை

ஆபாச வீடியோ எடுத்து கணவர் மிரட்டியதால் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-20 18:45 GMT

பெங்களூரு:

குழந்தைகள் இல்லை

பெங்களூரு பனத்தூர்-வர்த்தூர் சாலையில் வசித்து வருபவர் நிகர் ரஞ்சன் (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உபசனா (34). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் 2 பேரும் வர்த்தூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த நிகர், உபசனாவிடம் விவாகரத்து கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தார். எனினும், அவர்கள் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

தற்கொலை

இந்த நிலையில் நிகருக்கும், அவரது மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உபசனா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர், குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வர்த்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உபசனா கைப்பட எழுதிய கடிதமும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில், திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து அதனை வெளியிடுவதாகவும் மிரட்டினார். இதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது சாவுக்கு காரணமான என்னுடைய கணவருக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று எழுதி இருந்தார்.

கைது

இதுகுறித்து வர்த்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிகர் ரஞ்சனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்