கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டு யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு கிணற்றில் விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்கப்பட்டது.

Update: 2022-11-15 10:53 GMT

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே காட்டு யானை ஒன்று விளைநிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தவித்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மக்கள், யானை கிணற்றில் விழுந்தது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் யானையை மீட்பதற்கு பல வகைகளில் நீண்ட நேரமாக முயற்சி செய்தும் பலன் அளிக்காததால், அவர்கள் வேறு வழியை யோசித்தனர்.

அதன்படி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கிணற்றின் ஒரு பக்கத்தை உடைத்து யானை மேலே ஏறி வருவதற்கு வழி ஏற்படுத்தினர். அதைப் பயன்படுத்தி அந்த காட்டு யானை லாவகமாக மேலே ஏறிச்சென்று அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. 

Tags:    

மேலும் செய்திகள்