வனப்பகுதியில் சபாரி வாகனங்களை துரத்திய காட்டு யானை

நாகரஒலே வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சபாரி சென்ற வாகனங்களை காட்டு யானை ஒன்று துரத்தியது.;

Update: 2023-09-11 18:45 GMT

மைசூரு

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவில் நாகரஒலே வனச்சரணாலயம் உள்ளது. இந்த வனச்சரணாலயத்தில் வனவிலங்குகளை அதன் வாழ்விடத்திற்கே சென்று கண்டு ரசிக்கும் சபாரி வசதி உள்ளது. இதற்காக வனத்துறை சார்பில் மின்சார வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகரஒலே வனப்பகுதியில் வனத்துறை வாகனங்களில் சுற்றுலா பயணிகள் சபாரி சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதிக்கு உட்பட்ட குட்டா சாலையில் காட்டு யானை ஒன்று ராஜநடை போட்டு சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் 2 சபாரி வாகனங்கள் அங்கு வந்தன. காட்டு யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செல்போன்கள், கேமராக்களில் படம் பிடித்தனர்.

சபாரி வாகனங்களை பார்த்த காட்டு யானை விறுவிறு என நடந்து சென்றது. ஒரு கட்டத்தில் திடீரென்று காட்டு யானை திரும்பி பார்த்து சபாரி வாகனங்களை துரத்தின. இதனால் சபாரி வாகனங்களை டிரைவர்கள் பின்னோக்கி இயக்கினர்.

ஓடி வந்த காட்டு யானை பாதி வழியிலேயே திரும்பி சென்றுவிட்டது. இதனால் சபாரி வாகனங்களில் பயணித்த சுற்றுலா பயணிகள் யானையின் பிடியில் சிக்காமல் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்