ராமநகர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

ராமநகர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்ட வீட்டு உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-08-22 18:45 GMT

ராமநகர்-

ராமநகர் மாவட்டம் கனகபுரா டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். அந்த பெண் தன்ராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண் குளிக்கும் வீடியோ காட்சிகள் ராமநகரில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதை பார்த்து அந்த பெண்ணும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கனகபுரா டவுன் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த பெண் குளிப்பதை வீட்டு உரிமையாளர் தன்ராஜ் தான் வீடியோ எடுத்ததும், வாட்ஸ்-அப் குரூப்பில் வீடியோவை வெளியிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாகி விட்ட தன்ராஜை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்