படகை தன் கையால் செலுத்தி கிராமங்களுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி பயணம்

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி படகு ஒன்றை தன் கையால் செலுத்தி கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.

Update: 2022-11-30 13:12 GMT



கொல்கத்தா,


திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு இன்று பயணம் மேற்கொள்ள முடிவு செய்து சென்றார்.

இதற்காக அவர், படகு ஒன்றை தன் கைப்பட செலுத்தி கிராம பயணம் மேற்கொண்டார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து உள்ளது. அதில், அவருக்கு அருகே அமர்ந்துள்ள நபர், படகை எப்படி செலுத்துவது என்று அவருக்கு வழிகாட்டுகிறார்.

இதன்பின்னர், ஹஸ்னாபாத் பள்ளிக்கு சென்ற அவர், மாணவர்களுக்கு சாக்லேட்டுகள் மற்றும் பொம்மைகளை வழங்கினார். பின்பு, அந்த பகுதியில் கபுகுர் என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு குளிர்கால ஆடைகளையும் அவர் வழங்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்