'பீர்' வாங்கி வராததால் வாலிபருக்கு கத்திக்குத்து
‘பீர்’ வாங்கி வராததால் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகவாரபாளையா பகுதியில் வசித்து வருபவர் பாபாஜன்(வயது 23). இவரது நண்பர் ராகவேந்திரா(24). இந்த நிலையில் நேற்று பாபாஜன், மதுக்கடைக்கு சென்று பீர் வாங்கினார். அப்போது பாபாஜனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ராகவேந்திரா தனக்கும் பீர் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
ஆனால் கையில் பணம் இல்லாததால் ராகவேந்திராவுக்கு, பாபாஜன் பீர் வாங்கி வரவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராகவேந்திரா, பாபாஜனுடன் தகராறு செய்தார். மேலும் அவரை கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய பாபாஜனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவேந்திராவை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.