தீர்த்தஹள்ளியில் நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் காயமடைந்த வழக்கில் அண்ணன் கைது

தீர்த்தஹள்ளியில் நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் காயமடைந்த வழக்கில் அண்ணன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-08-07 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா தாசனகத்தே கிராமத்தில் வசித்து வருபவர் ராகேஷ்(வயது27). இவரது அண்ணன் ராஜேஷ்(30). கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை ராஜேஷ் எடுத்து கையில் வைத்திருந்தார். அப்போது அந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தது.

இதனால் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு ராகேசின் வலது காலை துளைத்தது. இதன்காரணமாக அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். அதையடுத்து அவரை அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தீர்த்தஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஷ், உரிய அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவருடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கியையும், தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்