மனைவி இறந்த துக்கத்தில் தீக்குளித்து வாலிபர் தற்கொலை

பெலகாவியில் மனைவி இறந்த துக்கத்தில் தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-26 20:25 GMT

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா ஜுஞ்சரவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவா ராமப்பா காம்பளே(வயது 26). இவரது மனைவி ரூபா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூபா திடீரென மரணம் அடைந்தார். இதனால் சதாசிவா மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதாசிவா தீக்குளித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சதாசிவா பலியானார். இச்சம்பவம் குறித்து ஐகலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்