மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் உல்லாசமாக இருந்தபோது தொழில் அதிபர் மாரடைப்பால் உயிரிழந்தது அம்பலம்

பெங்களூருவில் தொழிலதிபர் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கார பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது அவர் உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது. இதுபற்றி வேலைக்கார பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2022-11-24 22:15 GMT

பெங்களூரு: பெங்களூருவில் தொழிலதிபர் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கார பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது அவர் உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது. இதுபற்றி வேலைக்கார பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தொழிலதிபர் மர்மசாவு

பெங்களூரு புட்டேனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 67). தொழிலதிபரான இவர் தனது மகன், மருமகளுடன் வசித்து வந்தார். இவர், கடந்த 16-ந் தேதி தனது பேரனை அழைத்து கொண்டு வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அவர் ஜே.பி.நகர் பகுதியில் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால் அவரது உடலில் காயம் ஏதும் இல்லை. உடலை மீட்ட போலீசார் அவரது செல்போன் போன்றவற்றை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அவருக்கு, பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

திடுக்கிடும் தகவல்கள்

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது பால சுப்ரமணியனுக்கும், அவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதன்படி சம்பவத்தன்று அவர் தனது பேரணை வெளியே அழைத்து சென்றுவிட்டு, பின்னர் தனியாக வேலைக்காரி வீட்டிற்கு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது திடீரென அவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அந்த பெண், தனது கணவரிடம் பாலசுப்ரமணியன் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என கூறி உள்ளார். மேலும் போலீசாருக்கு தெரிந்தால், அவரை கொலை செய்துவிட்டதாக நினைத்துவிடுவார்கள் என தம்பதி எண்ணி உள்ளனர்.

இதையடுத்து 2 பேரும் சேர்ந்து பாலசுப்பிரமணியன் உடலை பையில் போட்டு ஜே.பி.நகர் அருகே உள்ள சாலையில் வீசி சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண் மற்றும் அவரது கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்