பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-08-22 21:26 GMT

பெங்களூரு:

பெங்களூரு ராஜாஜி நகர் 5-வது பிளாக் பகுதியில் உள்ள சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. அதனை மாநகராட்சி அதிகாரிகள் சரிசெய்தனர். இதையடுத்து மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. மழை பெய்யும் போதெல்லாம் அந்த சாலையில் பள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் பள்ளம் ஏற்படும் பகுதியில் இரும்பு தடுப்பு மட்டும் வைக்கப்பட்டிருந்தது. மாகடி ரோடு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பிரதான சாலையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று ராஜாஜிநகர் உள்பட நகரில் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் அந்த சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அந்தப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் வேறு பாதை சுற்றி செல்ல வேண்டி உள்ளது. அந்த சாலை பள்ளத்தை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்