கடலோர மாவட்டங்களில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த சிறப்பு திட்டம்

கடலோர மாவட்டங்களில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் வகுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2023-01-28 18:45 GMT

மங்களூரு, ஜன.29-

பரசுராமர் தீம் பார்க்

உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகாவில் உள்ள உமிகல் மலைப்பகுதியில் பரசுராமர் சிலையுடன் கூடிய தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீம்பார்க்கை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

கடலோர மாவட்டத்தில் பரசுராமர் சிலையுடன் கூடிய தீம்பார்க்கை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இது வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். இந்த பரசுராமர் துளுநாட்டை

உருவாக்கிய பரஷியோ, கர்ணனின் ஆளுமை கொண்டனர். மேலும் தைரியமானவர். சிவபெருமானின் ஆசி பெற்றவர். தாயால் நேசிக்கப்பட்டாலும், தந்தையின் கட்டளைக்கு கீழ்படிந்தவர்.

கடலோர மாவட்ட மக்கள் பரசுராமரை நினைவில் கொள்ளவேண்டும். வரலாற்றை மக்கள் மறந்துவிட கூடாது. அதை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளவேண்டும். அதிலும் பரசுராமரின் வரலாற்றை அனைவரும் நினைவு கூறவேண்டும். அவரை போன்று தைரியமாகவும், துணிச்சலுடனும் இருக்கவேண்டும்.

சுற்றுலா தலம் மேம்படுத்தப்படும்

இந்த பரசுராமர் தீம் பார்க் போன்று கடலோர மாவட்டங்களில் மேலும் சில சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும். அதற்காக மாநில அரசு சார்பில் சிறப்பு திட்டம் வகுக்கப்படும். மங்களூரு மாவட்டத்தில் ஏராளமான உழைக்கும் மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில், சுற்றுலா தலங்கள் மற்றும் தொழில்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக மங்களூருவின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். துறைமுகம், தளவாட பூங்கா, சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும் தொழில் நிறுவனங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு

முதற்கட்டமாக ஹைட்ரஜன், அமோனியா தயாரிப்பில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளனர். இதேபோல பல நிறுவனங்களின் முதலீடுகளை மங்களூரு ஈர்க்கவேண்டும். அதற்கான வழிவகை செய்யப்படும். முதலீடுகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அதிகரிக்கும்போது, மக்களின் வாழ்க்கை தாமாக மேம்பாடு அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்