வாகனம் மோதி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சாவு

விஜயாப்புராவில் வாகனம் மோதி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-09-18 20:33 GMT

விஜயாப்புரா:

விஜயாப்புரா மாவட்டம் பபலேஸ்வரா தாலுகா திகரிபிகரி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஈஸ்வர், சந்தோஷ். இவர்கள் 2 பேரும் தார்வார் கிராமத்தில் கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஈஸ்வர், சந்தோசை தார்வார் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். திகரிபிகரி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இநத விபத்து குறித்து பபலேஸ்வரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம், அதன் டிரைவரை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்