மரத்தில் இருந்து தவறி விழுந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவு
உடுப்பி அருகே ஹெப்ரியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்தார்.;
மங்களூரு;
உடுப்பி மாவட்டம் ஹெப்ரி தாலுகா நாட்பாலு அருகே வந்தியாலா பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் ஷெட்டி(வயது 68). ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ராஜகோபால் ஷெட்டி தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் இருந்த மரத்தின் கிளைகளை வெட்ட முடிவு செய்தார். அதன்படி அவர், மரத்தில் ஏறி கிளைகளை வெட்டி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ராஜகோபால் ஷெட்டி, மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜகோபால் ஷெட்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஹெப்ரி போலீசார் விரைந்து வந்து ராஜகோபால் ஷெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹெப்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.