காபித்தோட்ட தொழிலாளிகளுக்கு காபிச்செடிகள் வழங்கும் நிகழ்ச்சி

விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட காபித்தோட்ட தொழிலாளிகளுக்கு காபிச்செடிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-10-17 18:45 GMT

குடகு:

கர்நாடக மகரிஷி வால்மீகி பரிசிஷ்ட வளர்ச்சி ஆணையம், கோணிகொப்பா காபி வாரியம், விராஜ்பேட்டை தாலுகா மால்தாரே புடகட்டு ஆதிவாசி காபி தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் காபித்தோட்ட தொழிலாளர்களுக்கு காபிச்செடிகள் வழங்கும் நிகழ்ச்சி மால்தாரேவில் உள்ள கூட்டுறவு மண்டப வளாகத்தில் வைத்து நடந்தது. இதில் விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஏராளமான கிராமங்களில் வசித்து வரும் காபித்தோட்ட விவசாயிகளுக்கு காபி செடிகள் வழங்கப்பட்டன.

மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு சார்பில் வழங்கப்படும் கடன் உதவி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் குடகு மாவட்ட தெற்கு காபி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீதேவி, சித்தாப்புரா காபி மண்டல அதிகாரி கதீஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்