போலீஸ் ஜீப்பில் இருந்து குதித்த கைதி பலி

சாம்ராஜ்நகரில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க நினைத்து ஓடும் ஜீப்பில் இருந்து குதித்த கைதி பரிதாபமாக பலியானார்.

Update: 2022-11-29 20:34 GMT

கொள்ளேகால்:-

பாலியல் பலாத்கார வழக்கு

சாம்ராஜ்நகர் மாவட்டம் மாம்பள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் நிங்கராஜண்ணா(வயது 30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் மாம்பள்ளி போலீசார்

நிங்கராஜண்ணாவை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த நிங்கராஜண்ணா, ஓடும் ஜீப்பில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அதைப்பார்த்த போலீசார், உடனடியாக ஜீப்பை நிறுத்தி நிங்கராஜண்ணாவை மீட்டனர்.

பரிதாப சாவு

பின்னர் அவரை சிகிச்சைக்காக எலந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் காலையில் நிங்கராஜண்ணா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எலந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்