திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானம் பறந்ததால் பரபரப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2023-09-07 22:17 GMT

திருமலை,

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்துக்களின் புனித தலமாக கருதப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவில் மேலே வானத்தில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏழுமலையான் கோவில் மேலே வானத்தில் விமானங்கள் பறந்தன. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் ஏழுமலையான் கோவில் மேலே வானத்தில் விமானம் ஒன்று பறந்ததால் திருமலையில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

3 மாதங்களில் 4 விமானங்கள்

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானது. திருமலை வழியாக விமானங்கள் பறக்கக்கூடாது என்று விமானப் போக்குவரத்துத்துறைக்கு திருப்பதி தேவஸ்தானம் பலமுறை வேண்டுகோள் விடுத்து வருகிறது.

ஆனால், விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், திருமலை விமான போக்குவரத்து தடை மண்டலம் அல்ல என்றும், விமானப் போக்குவரத்து அதிகரிக்கும்போது, திருமலை வழியாகப் போக்குவரத்துத் தவிர்க்க முடியாதது என்றும், கூறுகிறார்கள்.

இதற்கிடையே, கடந்த 3 மாதங்களில் மட்டும் திருமலையில் ஏழுமலையான் கோவில் மேலே 4 முறை விமானங்கள் வட்டமடித்து பறந்துள்ளன என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்