காஷ்மீர் என்கவுண்டர்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுண்டர் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

Update: 2022-06-06 17:23 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிரித்து வருகிறது. குறிப்பாக, இந்து மதத்தினர் மற்றும் வெளிமாநிலத்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரின் சோர்புர் மாவட்டம் பனிபுரா பகுதியில் உள்ள காட்டிற்குள் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இன்று இரவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த ஹன்ஷலா என்பது தெரியவந்தது. மேலும், பயங்கரவாதி லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

அதேவேளை, மேலும் சில பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதால் அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்