கொல்லம் அருகே முட்புதரில் சுற்றித்திரிந்த மர்ம விலங்கு பிடிபட்டது

கொல்லம் அருகே முட்புதரில் சுற்றித்திரிந்த மர்ம விலங்கை வனத்துறையினர் பிடித்து கூண்டில் அடைத்தனர்.;

Update: 2022-07-01 03:29 GMT

பாலக்காடு:

கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது. இங்குள்ள முட்புதரில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் மர்ம விலங்கு ஒன்று சுற்றித்திரிந்தது. உடனே தீயணைப்புத்துறையினர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், அந்த மர்ம விலங்கை பிடித்து கூண்டில் அடைத்தனர். தொடர்ந்து வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இதுபோன்ற விலங்கை இதுவரை நாங்கள் பார்த்தது இல்லை. அதன் கண்கள் வைரம் போன்று மின்னுகிறது. இது மரநாய் இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்