ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.;

Update: 2022-06-10 20:10 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12.37 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில், பஹல்காமில் இருந்து 64 கிமீ தொலைவில்ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது டுவிட்டரில், "ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற புள்ளிக் கணக்கில் இன்று நள்ளிரவு 12.37 மணிக்கு ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பஹல்காமில் இருந்து 64 கிமீ தொலைவில் ஏற்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்