"தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே பல அரசியல் நடக்கிறது"- தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேச்சு
பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் கலைமாமணி விருது வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.;
புதுச்சேரி,
புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் கலைமாமணி விருது வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலைலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், இயல், இசை, நாடகம், நடனம், ஒவியம், நாட்டுப்புறக் கலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 216 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடைபெறுகிறது என்றார்.