வீடு புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை

ஹாசனில் வீடு புகுந்து நாயை சிறுத்தை வேட்டையாடியது.

Update: 2022-08-06 17:21 GMT

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா அருகே ஸ்ரீகாந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜம்மா. இவரது வீடு காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டுக்குள் சிறுத்தை புகுந்துள்ளது. மேலும் வீட்டில் வளர்த்து வந்த நாயை அந்த சிறுத்தை வேட்டையாடி வாயில் கவ்வியபடி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. நேற்று காலை கண்விழித்த சரோஜம்மா நாயை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்த பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் சிறுத்தை வீட்டின் சுற்றுச்சுவரை குதித்து வீட்டுக்குள் புகுந்து படுத்திருந்த நாயை வேட்டையாடி தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்