சபாரி பாதையில் உலா வந்த சிறுத்தை; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

முத்தோடி வனப்பகுதியில் சபாரி பாதையில் உலா வந்த சிறுத்தையை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-07-06 15:19 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு அருகே முத்தோடி வனப்பகுதியில் பத்ரா வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சபாரி அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள். இங்கு கர்நாடகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

தற்போது மழை பெய்து வருவதால் வனப்பகுதி பச்சை பசேலென்று இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சபாரி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனத்தில் சபாரி அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது சிறிது தூரத்தில் சபாரி பாதையில் சிறுத்தை ஒன்று உலா வந்தது. அந்த சிறுத்தையை கண்டு சுற்றுலா பயணிகள் பரவசமடைந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் செல்போன் மற்றும் கேமராக்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளை எந்த தொந்தரவும் செய்யாமல் அந்த சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது.

இதுகுறித்து சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், சபாரி செல்லும்போது சிறுத்தையை பார்த்ததும், பச்சை பசேலென்று வனப்பகுதியை பார்த்ததும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்