சிறுத்தை கூண்டில் சிக்கியது
மைசூருவில் ஜெயபுரா அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.;
மைசூரு:
சிறுத்தை அட்டகாசம்
மைசூரு (மாவட்டம்) தாலுகா ஜெயபுரா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மார்பள்ளி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் இரைதேடி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நிைலயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகுந்துள்ளது. அந்த சிறுத்தை மார்பள்ளி கிராமம் மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் சென்று அட்டகாசம் செய்து வந்தது.
இரும்பு கூண்டு வைத்து...
மேலும் அது வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளையும், வளர்ப்பு பிராணிகளான நாய்களையும் வேட்டையாடி கொன்று வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை கால் தடம் பதிந்துள்ள அதே பகுதியை சேர்ந்த மகாதேவம்மா என்பவரது விளைநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு இரும்பு கூண்டு வைத்தனர். அதில் சிறுத்தைக்கு இரையாக நாய் ஒன்றை கட்டி வைத்திருந்தனர்.
4 வயது ஆண் சிறுத்தை
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நாயை வேட்டையாட வந்த சிறுத்தை, இரும்பு கூண்டிற்குள் சிக்கியது. இதையடுத்து கிராம மக்கள் சிறுத்தை கூண்டில் சிக்கி இருப்பதை அறிந்து உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் போில் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். சிறுத்தை கூண்டில் சிக்கிய தகவல் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பரவி மக்கள் கூட்டம் கூட்டமாக வரதொடங்கினர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டோடு எடுத்து சென்று பந்திப்பூர் வனப்பகுதியில் விட்டனர். இதில் பிடிபட்டது 4 வயது ஆண் சிறுத்தை என்பது ெதரியவந்தது. தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை
பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.