மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை சிறுத்தை தாக்கியது

கடப்பாவில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை சிறுத்தை தாக்கியது.

Update: 2023-01-12 18:45 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகாவில் ஜந்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ளது. இதனால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக அந்த பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை மாடுகளை தாக்கியது. இதில் சில மாடுகளில் உடல்களில் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுத்தை அங்கிருந்து வனத்திற்குள் தப்பி சென்றனர். இதையடுத்து மாலையில் மாடுகளை அழைத்து வருவதற்காக விவசாயி சென்றார். அப்போது மாடுகள் உடலில் காயங்கள் இருந்ததும், அந்த பகுதியில் சிறுத்தையின் கால்தடம் இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர் வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், சிறுத்தையை பிடிக்க அந்த பகுதியில் கூண்டு வைப்பதாகவும் கூறினர். எனினும் சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்