பசுமாட்டை தாக்கி கொன்ற சிறுத்தை
மூடிகெரே அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கமகளூரு:-
வன விலங்குகள் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் உள்ளது ஆலேக்கான் கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றன. இந்த வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும்படி கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வன விலங்குகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சிறுத்தை கிராமத்திற்குள் புகுந்து நடமாடி சென்றிருப்பதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரின் பசுமாட்டை அந்த சிறுத்தை வேட்டையாடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சிறுத்தை தாக்கியது
அதாவது நேற்று முன்தினம் மஞ்சுநாத் தனக்கு சொந்தமான பசுமாடு ஒன்றை மேய்ச்சலுக்காக கிராமத்தின் அருகேயுள்ள வனப்பகுதியில் விட்டிருந்தார். பின்னர் வழக்கம்போல மாலையில் பசுமாட்டை அழைத்து வருவதற்காக சென்றிருந்தார். அப்போது அவர் மேய்ச்சலுக்கு விட்ட வனப்பகுதியில் பசுமாடு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கிராம மக்கள் உதவியுடன் மாட்டை தேடினார். அப்போது வனப்பகுதியின் அருகே பசுமாடு இறந்து கிடந்தது.
அதாவது பாதி உடல் மட்டுமே இருந்தது. மீதி உடல் காணவில்லை. மேலும் அந்த இடத்தில் சிறுத்தை கால் தடம் பதிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை, பசுமாட்டை அடித்து கொன்றிருப்பதை உறுதி செய்தனர். சிறுத்தை நடமாட்டத்தால் பீதியடைந்த கிராம மக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பசுமாட்டின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
அப்போது கிராம மக்கள் அனைவரும் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இல்லை என்றால் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்