சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி நின்ற அரசு பஸ்

பெட்டகேரி கிராமம் அருகே சாக்கடை கால்வாய்க்குள் அரசு பஸ் இறங்கியது.;

Update: 2022-09-14 14:59 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் பெட்டகேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து குத்திஹள்ளி கிராமத்திற்கு நேற்றுமுன்தினம் மாலை சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் பெட்டகேரி கிராமத்தின் அருகே உள்ள ஒரு திருப்பத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாயில் இறங்கி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் பயத்தில் அலறினர். இதில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகள் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து பஸ்சில் சிக்கிய பயணிகளை மீட்டனர். இதுபற்றி அறிந்த பனகல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் ெபாக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பஸ்சை பள்ளத்தில் இருந்து மீட்டனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்