ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரெயில் - மக்கள் அதிர்ச்சி
70 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6-7 மணியளவில் சரக்கு ரெயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டது.
கதுவாவிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு, சரக்கு ரெயில் பஞ்சாபின் கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சியை அடைந்ததாக கூறப்படுகிறது. அங்கு சரக்கு ரெயில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ரெயில்வே பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முழுமையான விசாரணை அவசியம் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஜம்மு ரெயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.