பெங்களூருவில் நின்று கொண்டிருந்த ரெயிலில் தீ விபத்து

பெங்களூரு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-08-19 03:55 GMT

பெங்களூரு,

பெங்களூரு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உத்யான் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 5.45 மணியளவில் பெங்களூரு சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கிச் சென்றனர். இந்த நிலையில் காலை 7 மணியளவில் ரெயிலின் பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வரத் தொடங்கியது.

அதிகாரிகள் புகை வருவதற்கான காரணம் என்ன என்று பார்ப்பதற்குள்ளாகவே தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 25 நிமிடத்தில் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தைத் தொடர்ந்து உத்யான் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்த 3-வது நடைமேடை மற்றும் அருகில் உள்ள 4-வது நடைமேடையில் எந்த ரெயில்களும் வர அனுமதிக்கப்படவில்லை.

பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பிறகே தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நின்று கொண்டிருந்த ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்