டெல்லியில் சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து

தியேட்டரில் சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.;

Update: 2023-05-21 22:10 GMT

புதுடெல்லி,

மேற்கு டெல்லியின் மோதி நகரில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் நேற்று மதியம் வழக்கம்போல ஏராளமானோர் சினிமா பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது புரொஜக்டர் அறையில் இருந்த ஏ.சி. எந்திரம் மற்றும் மெஷினில் திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ மளமளவென பக்கத்து அறைக்கும் பரவியது. உடனே அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்துடன் தியேட்டரில் சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து மேற்கு டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்