ஓடும் காரில் தீ விபத்து....பெண் உடல் கருகி பலி

ராஜஸ்தானில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Update: 2024-01-19 02:34 GMT

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அசோக் படேல் (30) என்பவர் தனது மனைவி பரமேஸ்வரி படேலுடன்(26) ,பாலியில் உள்ள செண்டா கிராமத்திற்கு அருகே உள்ள அஜானி மாதா கோவிலுக்கு காரில் சென்றுள்ளார் .

இந்த நிலையில், அவர்களது காரின் பின்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, காரின் பின் இருக்கையில் பாதி எரிந்த நிலையில் பரமேஸ்வரி உடல் கண்டெடுக்கப்பட்டது என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் காரை ஓட்டி வந்த அந்த பெண்ணின் கணவர் சரியான நேரத்தில் வெளியே வந்ததாக போலீசார் அதிகாரி தெரிவித்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை . இதில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து அசோக்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்