சிவமொக்கா அருகே வங்கி மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய விவசாயி கைது

சிவமொக்கா அருகே வங்கி மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-10 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா ஒசஹள்ளி பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் வங்கிக்கு அதேப்பகுதியை சேர்ந்த விவசாயி ரேவு நாயக் சென்றார். அவர் அங்கிருந்த ஊழியர்களிடம் தான் பசுமாடு வாங்க இருப்பதாகவும் அதற்கு வங்கியில் கடன் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

இதனை கேட்ட ஊழியர் மேலாளரிடம் பேசும்படி ரேவு நாயக்கிடம் கூறினார். இதையடுத்து ரேவு நாயக் மேலாளரிடம் கடன் பெறுவது சம்பந்தமாக பேசினார். அப்போது மேலாளர் ேரவு நாயக்கிடம் கடன் பெறுவதற்கான ஆவணங்களை கொண்டு வரும்படி கூறினார். அவர் தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என மேலாளரிடம் கூறியுள்ளார்.

அதற்கு மேலாளர் வங்கியில் ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்க முடியாது என்று தொிவித்தார். இதனை கேட்டு ரேவு நாயக் கோபம் அடைந்தார். இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேவு நாயக் மேலாளரை மிரட்டி பசுமாடு வாங்க கடன் தருமாறு கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேலாளர் துங்கா நகர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேவு நாயக்கை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்