துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட பிரபல ரவுடி கைது

இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்திய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-03 18:45 GMT

மங்களூரு:-

பிரபல ரவுடி அட்டகாசம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த காவூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மூடுசெட் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட எடூர்பதவு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் ராய். பிரபல ரவுடியான இவர் மீது காவூர் போலீசார் பல வழக்குகள் உள்ளது. மேலும் காவூர் போலீஸ் நிலைய ரவுடி சீட்டர் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. தொழில் அதிபர் என்று கூறப்படுகிறது. மேலும் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், ராஜேஷ் ராயிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் ராஜேஷ் ராய் அடிக்கடி அந்த இளம் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த தகராறில் போது அக்கம் பக்கத்தினர் குறுக்கிட்டு ராஜேஷ்ராயை சமாதானம் செய்து வைப்பார்கள். இருப்பினும் அவர் இளம் பெண்ணிடம் தகராறு செய்வதை விடவில்லை.

துப்பாக்கி சூடு

இந்நிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் வந்த ராஜேஷ் ராய், இளம் பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இளம் பெண்ணிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் வந்தனர். அப்போது இளம் பெண் குடும்பத்தினருக்கும், ராஜேஷ் ராய்க்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதில் கோபமடைந்த ராஜேஷ், வீட்டில் இருந்து கை துப்பாக்கியை எடுத்து வந்து, அங்கிருந்தவர்களை சுடுவதாக மிரட்டினார். ஆனால் இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் பயப்படவில்லை.

இதையடுத்து கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ராஜேஷ் ராய், கை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து காவூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவூர் போலீசார் ராஜேஷ் ராயை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் ேபரில் காவூர் போலீசார் ராஜேஷ் ராய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்