சச்சினையும் விட்டு வைக்காத டீப் பேக்... வைரலாகும் ஆன்லைன் கேம் ஆப் விளம்பர வீடியோ..!

சமீபத்தில் பிரதமர் மோடி நடனமாடுவது போன்ற டீப் பேக் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Update: 2024-01-15 12:18 GMT

புது டெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டீப் பேக் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட அந்த விடியோவில் ஒரு விளையாட்டு செயலி மூலம் சச்சின் டெண்டுல்கரின் மகள் பணம் சம்பாதித்ததாகவும், அந்த செயலியை அனைவரும் பயன்படுத்துமாறு சச்சின் கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த சச்சின் டெண்டுல்கர், 'இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இது போன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். தவறான தகவல் மற்றும் டீப்பேக் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க அவர்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், ஆலியா பட், பிரியங்கா சோப்ராவை தவறாக சித்தரித்து டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பிரதமர் மோடி நடனமாடுவது போன்ற டீப் பேக் வீடியோவும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்