மகதாயி விவகாரத்தில் தெளிவான நிலையை அறிவிக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு சித்தராமையா வலியுறுத்தல்

மகதாயி விவகாரத்தில் தெளிவான நிலையை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2023-01-12 20:55 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மகதாயி நதி நீர் திட்டத்தில் கலசா-பண்டூரி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிராக கோவா முதல்-மந்திரி தலைமையில் அரசியல் கட்சியினர் உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த அனுமதியை வாபஸ் பெறுமாறு கோரியுள்ளனர்.

தங்களுக்கு சாதகமான பதிலை அமித்ஷா கூறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

34 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது திடீரென கலசா-பண்டூரி திட்டத்திற்கு அனுமதி வழங்கியது நியாயமான முடிவா? அல்லது அநியாயமான ஆட்டமா?. மகதாயி பிரச்சினையை தீர்க்க ஒரு ஆணையத்தை அமைக்குமாறு கோவா கேட்டுள்ளது. கோவாவின் அழுத்தத்திற்கு பணிந்து கலசா-பண்டூரி திட்டத்திற்கு அளித்த அனுமதியை வாபஸ் பெறக்கூடாது.

இந்த விஷயத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கவனித்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்த அரசியல் போராட்டத்தில் பலசாலிகளாக இருப்பவர்களே வெற்றி பெற முடியும் என்பது அரசியல் தத்துவம்.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்