2 நிமிடங்களில் அனுமன் பாடல்களை பாடிய 5 வயது சிறுவனுக்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு
2 நிமிடங்களில் அனுமன் பாடல்களை பாடிய 5 வயது சிறுவனை சந்திக்க ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு விடப்பட்டு உள்ளது.;
பதின்டா,
பஞ்சாப்பின் பதின்டா நகரில் வசித்து வரும் சிறுவன் கீதன்ஷ் கோயல் (வயது 5). இந்த வயதில் அசாத்திய திறமையுடன் அனுமன் சாலிசாவை 1 நிமிடம் மற்றும் 50 வினாடிகளில் கூறி ஆச்சரியப்படுத்துகிறான்.
அனுமன் சாலிசா 40 பாடல்களை கொண்டது. எந்தளவுக்கு பக்தியுடனும் மற்றும் ஞாபகத்துடனும் இவற்றை கூற சிறுவன் தன்னை வளர்த்து கொண்டான் என்பது பற்றி சிறுவனின் தாயார் பெருமையுடன் விளக்கி கூறினார். பெற்றோரை பெருமையடைய செய்த, அந்த சிறுவனுக்கு தேசிய அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
வருகிற 30-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில், நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்திக்க சிறுவனுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.