அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் பட்ஜெட்
அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் பட்ஜெட் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார்
சிக்கமகளூரு,
பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கா்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (நேற்று) தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் வரவேற்கக்கூடியது. சிக்கமகளூரு மாவட்டத்துக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.