கார் மோதி 4 வயது சிறுவன் சாவு
பெங்களூருவில் கார் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.;
பெங்களூரு:
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே சாதரமங்களா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர் பகதூர். இவரது மகன் கிருஷ்ணா பகதூர் (வயது4). இவன் நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நின்று விளையாடி கொண்டு இருந்தான்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் கிருஷ்ணா பகதூர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணா பகதூர் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தான். விபத்து குறித்து ஒயிட்பீல்டு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் காரையும், அதன் டிரைவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.