14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் - பஞ்சாயத்தாரின் தீர்ப்பால் நேர்ந்த விபரீதம்
உத்தரப்பிரதேசத்தில் 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் வரேலியில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். சம்பவத்தை தொடர்ந்து சிறுவனின் கிராமத்திற்கு சென்ற சிறுமியின் குடும்பத்தார், உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதில், சிறுவனுக்கு 18 வயது நிரம்பியதும், அதே சிறுமிக்கு திரும்ணம் நடத்திவைப்பதாகவும், இதுகுறித்து சிறுவன் மீது புகார் அளிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறுவனின் உறவினர்களின் பேச்சுக்கு சிறுமியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமி மன உளைச்சலுக்கு ஆளானதோடு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.