12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயதான சிறுமி. இந்த சிறுமி நேற்று முன்தினம் வழக்கம்போல வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியை வயலுக்குள் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன்பின் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
வெகுநேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் கவலை அடைந்த பெற்றோர் வயலுக்கு சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் சிறுமி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பற்றி சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள நர்சேனா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.