தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-20 09:46 GMT

புதுடெல்லி,

நாட்டில் 9.6 கோடி பேரிடமும், தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடமும் பாஸ்போர்ட் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 7.2 சதவீதமாகும். டிசம்பர் 2-வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். கேரளா மற்றும் மராட்டியத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்