அசுத்தமான தண்ணீர் குடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த 93 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

கிராமமக்கள் தண்ணீர் எடுத்த கிணறு அசுத்தமாக இருப்பது தெரியவந்தது.;

Update: 2024-07-01 21:00 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் முகாவ் கிராமத்தில் 107 வீடுகள் உள்ளது. இங்கு 440 பேர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு வயிற்று வலி, வயிற்று போக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். முகாவ் கிராம சுகாதார மையத்தில் 56 பேரும், மனஜாரம் கிராம சுகாதார மையத்தில் 37 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினரும் முகாவ் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிராம மக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிராமமக்கள் தண்ணீர் எடுத்த கிணறு அசுத்தமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கிணறுக்கு 'சீல்' வைத்தனர். மேலும் அருகில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்