குஜராத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - ஒருவர் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 39 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2023-01-18 22:02 GMT

Image Courtesy: AFP

https://www.dailythanthi.com/News/India/2022/05/05145301/Minor-girl-raped-killed-after-being-abducted-from.vpf

போடாட்,

குஜராத்தின் போடாட் நகருக்கு அருகே பகவான்பரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் 9 வயது சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சிறுமியின் உறவினர்களும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து 39 வயதான ராஜு தேவ்சாக் பாய் சவுகான் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் ஒரு நகைப்பட்டறையில் வைரம் 'பாலிஷ்' செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

Tags:    

மேலும் செய்திகள்